skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

திங்கள், 4 ஜனவரி, 2010

" இத‌னை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து"



காமராஜர் சாலை


ராயபுரம் கடற்கைரக்கு அடுத்த நிலையில் சென்னை மக்களின் மாலை நேர‌ உல்லாசபுரியாக‌ இருந்த "ஹைகோர்ட் பீச்" என்றைழக்கப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் எதிர‌லைமந்த பரந்த கடற்க‌ரை. கடற்கைரயில் வடபுறம் உள்ள‌ மக்கள் அங்கு செல்ல, இடையில் வரும் இரயில்வே கிராசிங்கை கடந்தே போக‌ வேண்டும். மின்சார தொடர்வண்டிகள் அதிகமாக செல்கின்ற நிலையில், மக்களின் நடமாட்டம், வாகன போக்குவரத்தும் ரயில்வே கதவைடப்பால் த‌டைப‌டும்.

இந்நிலையில்தான் ரிசர்வ் பேங்க் கட்டிடம் பிரமாண்டமான உருவில் சகல வசதிகளுடன் இப்போதிருக்கும் இடத்தில் கட்டப்பட்டு விட்டது. இதனால் மாலை நேர கடற்க‌ரைக் கூட்டத்துடன், வங்கி செயல்படும் நேரம் மக்கள் கூட்டம் ரயில்பாதையில் கூடத்தொடங்கி போக்குவரத்துக்கு சிக்கேலற்ப்பட்டது.

இதிலிருந்து மக்களுக்கு வசதி செய்து தர வேண்டுமெனில், ஒன்று, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும், அல்லது த‌ரை வழிப்பாலம் அமைக்க வேண்டும். வடபுறம் பாரிமுனை இருந்ததால் அங்கு மேம்பாலம் கட்ட சாத்தியமில்லை என முடிவாயிற்று. அப்படியானால், த‌ரைவழிப்பாலம் அமைத்து ரயில்வே பாதைக்கும், மக்களின் போக்குவரத்திற்க்கும் வழியைமைக்க வேண்டும்.

இது குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி உயர்மட்ட குழுவினரும் தமிழக பொதுப்ப‌ணி துறையின‌ரும் (PWD) ஆய்வு மேற்கொண்டனர்.அவர்கள் ஆய்வின் முடிவுப்ப‌டி த‌ரைப்பாலம் கட்டினால்

1) ரிச‌ர்வ் பாங்க் கட்டிட அடித்தளம் பாதிக்கப்பட்டு கட்டிடத்தில் விரிசல் ஏற்படலாம்.

2) அருகில் கடல் இருப்பதால் பாலத்தின் உட்புறம் ஊறிவரும் நீருற்றை நிரந்தரமாக கட்டுப்படுத்த முடியாது.

இந்த முடிவோடு முதலைமச்சர் காமராஜரை சந்திக்க சென்றனர்.




காமராஜ் கேட்டார், "என்ன முடிவெடுத்திருக்கீங்க ?" குழுவினர் சொன்னார்கள் " ஐயா! த‌ரைவழிப்பாலம் கட்ட முடியாது என்றே நாங்கள் அபிப்ராயப்படுகிறோம்".

காமராஜர் புன்னைகத்தார், அடுத்து உறுதியான குரலில் சொன்னார்
" முடியாதுன்னு சொல்றதுக்காகவா டெல்லியில‌ருந்து வந்தீங்க... த‌ரை வழிப்பாலம் கட்றோம்... நீங்க சொல்ற எந்த குறைபாடும் வராமல் கட்டி முடிக்கிறோம். இந்த உலகத்தில மனிதனால் செய்ய முடியாதென்ப‌து எதுவுமே கிடையாது. நீங்க புறப்படலாம்" என்றார்,வந்தவர்க‌ள் சென்றனர்.

" இத‌னை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து" அதற்க்குரிய வல்லுனர்க‌ளை அழைத்து, பொறுப்பை ஒப்ப‌டைத்தார்.

இன்று நாள் நாள் தோறும் மக்கள் கடந்து செல்லும் "காமராஜர் சாலை" த‌ரைவழிப் பாலம் உருவானது.

-ந‌ன்றி காம‌ராஜர் வாழ்க்கை வ‌ர‌லாறு
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 12:29 PM
Labels: அர‌சிய‌ல், ச‌மூக‌ம்

14 comments:

சங்கர் சொன்னது…

தமிழர்களின் நிஜமான தலைவனைப் பற்றிய நல்லதொரு பகிர்வு, நன்றி

4 ஜனவரி, 2010 அன்று 1:59 PM
vasu balaji சொன்னது…

ஹூம். அது ஒரு கனாக் காலம்.

4 ஜனவரி, 2010 அன்று 2:20 PM
sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல தகவல்....

4 ஜனவரி, 2010 அன்று 2:42 PM
கலையரசன் சொன்னது…

ஊருக்கு போயுமா???

உன் கடமை உணர்ச்சிக்கு "காமராசர் அவார்ட்டு" வெயிட்டிங் பாஸூ..

4 ஜனவரி, 2010 அன்று 4:27 PM
Unknown சொன்னது…

அவங்க இருந்த காலத்துல நான் பொறக்கலையேன்னு கவலையா இருக்கு.

4 ஜனவரி, 2010 அன்று 5:30 PM
புலவன் புலிகேசி சொன்னது…

பெருந்தலைவரின் வரலாற்று பகிர்வுக்கு நன்றி..அவரைப்போல் ஒருவ்ர் இனி...?

4 ஜனவரி, 2010 அன்று 7:07 PM
மகா சொன்னது…

நல்லதொரு பகிர்வு, நன்றி....

5 ஜனவரி, 2010 அன்று 1:46 PM
Prathap Kumar S. சொன்னது…

கல்வித்தந்த காமராஜர் பற்றி நல்லதகவல்.
கரிசலு நிங்க நல்லவரா கெட்டவரா?

6 ஜனவரி, 2010 அன்று 1:39 PM
அன்புடன் மலிக்கா சொன்னது…

காமராஜர் எனக்கு பிடித்த தலைவர்
நல்லதொரு இடுகை வாழ்த்துக்கள்

நேரம்கிடைக்கும்போது இதையும் வந்துபாருங்கள்

http://fmalikka.blogspot.com/

6 ஜனவரி, 2010 அன்று 2:26 PM
சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல பகிர்வு.

காமராஜர் மாதிரி வருமா.

6 ஜனவரி, 2010 அன்று 8:23 PM
துபாய் ராஜா சொன்னது…

புத்தாண்டின் முதல் பதிவு முத்தான பதிவு.வாழ்த்துக்கள் ஜூனியர்.

6 ஜனவரி, 2010 அன்று 10:55 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி சங்கர்

ந‌ன்றி வானம்பாடிகள் சார்

ந‌ன்றி Sangkavi

ந‌ன்றி க‌லை அவார்டு வ‌ந்து வாங்கிகிறேன்

ந‌ன்றி முகிலன்

ந‌ன்றி புலவன் புலிகேசி

ந‌ன்றி மகா

ந‌ன்றி நாஞ்சில் பிரதாப் தெரிய‌லையே ச‌கா

ந‌ன்றி அன்புடன் மலிக்கா க‌ண்டிப்பா வ‌ந்து பார்க்கிறேன்

ந‌ன்றி அக்பர்

ந‌ன்றி சீனிய‌ர்

7 ஜனவரி, 2010 அன்று 5:16 PM
RADAAN சொன்னது…

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

12 ஜனவரி, 2010 அன்று 4:13 PM
புலவன் புலிகேசி சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

13 ஜனவரி, 2010 அன்று 10:08 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ▼  ஜனவரி (1)
      • " இத‌னை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து"
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio